தரிசன டிக்கெட், லட்டு பிரசாதம்... திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில்
திருப்பதி ஏழுமலையான் கோயில்

ரூ.300 தரிசன டிக்கெட், லட்டு பிரசாதம் ஆகியவற்றின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. எனவே, பக்தர்கள் யாரும் இடைத்தரகர்களை பக்தர்கள் நாட வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உலகிலேயே அதிகமான பக்தர்கள் வழிபடச் செல்லும் இந்து கோயில் என்ற பெருமையை ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் பெற்றுள்ளது. இங்கு ஒருநாளைக்கு சராசரியாக 50 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். விசேஷ நாட்களில் 1 லட்சம் பக்தர்கள் வரை ஏழுமலையானை தரிசிக்கின்றனர். உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் இந்து கோயில்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் முதலிடத்தை வகிக்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயில்
திருப்பதி ஏழுமலையான் கோயில்

இந்த நிலையில்,திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என்றும், ரூ.300 தரிசன டிக்கெட்டுகள், லட்டு பிரசாதம் ஆகியவற்றின் விலைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன் ரூ. 300 தரிசன டிக்கெட்களை அதிக எண்ணிக்கையில் வாங்கித் தருகிறோம் என்று சில இடைத்தரகர்கள் தங்கள் செல்போன் நம்பர்களுடன் சமூக வலைதளங்களில் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், " ரூ. 300 தரிசன டிக்கெட், லட்டு பிரசாதம் ஆகியவற்றின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. ரூ. 300 தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானத்தின் வெப்சைட் மூலமும், மாநில அரசுக்குச் சொந்தமான ஒரு சில சுற்றுலா வளர்ச்சி கழகங்கள் மூலமும் மட்டுமே பக்தர்கள் பெற முடியும். ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை பெற பக்தர்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம். சமூக வலைதளங்களில் வெளியாகும் இது போன்ற போலியான தகவல்களை பக்தர்கள் நம்ப கூடாது" என்று அறிவுறுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in