இன்று முதல் தமிழ்நாட்டில் முக்கிய ரயில்களின் நேரம் மாற்றம்! பயணிகள் அவதி!

இன்று முதல் தமிழ்நாட்டில் முக்கிய ரயில்களின் நேரம்  மாற்றம்! பயணிகள் அவதி!

தமிழ்நாட்டில் வைகை, பொதிகை, பாண்டியன் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரை - சென்னை இடையேயான வைகை எக்ஸ்பிரஸ் (12636) காலை 7.10 மணிக்கு பதிலாக 6.40-க்கு புறப்பட்டு பிற்பகல் 2:10 மணிக்கு சென்னை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - மதுரை இடையேயான வைகை எக்ஸ்பிரஸ் (12635) வழக்கம்போல பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு பதிலாக 9.30க்கு மதுரை சென்றடையும்.

செங்கோட்டை - சென்னை இடையேயான பொதிகை எக்ஸ்பிரஸ் (12662) மதுரையிலிருந்து இரவு 09.55 மணிக்கு பதிலாக 09.45க்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - செங்கோட்டை இடையேயான பொதிகை எக்ஸ்பிரஸ் (12661) மதுரையிலிருந்து அதிகாலை 04.45 மணிக்கு பதிலாக 04.30க்கு புறப்படும் என்று ரயில்வே கூறியுள்ளது.

மதுரை - சென்னை இடையேயான பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638) மதுரையிலிருந்து இரவு 09.35 மணிக்கு பதிலாக 09.20க்கு புறப்படும். மதுரை - கோவை இடையேயான கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் (16722) மதுரையிலிருந்து காலை 07.25 மணிக்கு பதிலாக 07.00 மணிக்கு புறப்படும்.

மதுரை - விழுப்புரம் இடையேயான விழுப்புரம் எக்ஸ்பிரஸ் (16868) மதுரையிலிருந்து அதிகாலை 04.05 மணிக்கு பதிலாக 03.35 மணிக்கு புறப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இதுபோல் நாடு முழுவதும் 182 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே திட்டமிட்டிருந்த தங்களது பயணம், இந்த திடீர் ரயில் புறப்படும் நேரத்தில் செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!

'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!

எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு!

நாளை தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்!

‘ஆடியோ லாஞ்ச் கேன்சல்’ அதிமுகவைத் தேடிப்போன அண்ணாமலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in