அதிர்ச்சி... அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 2 பேர் பலி!

அதிர்ச்சி... அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 2 பேர் பலி!

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரபங்கி மாவட்டம் ஃபதேபூர் அருகே சத்தி பஜாரில் உள்ள மூன்று மாடி குடியிருப்பு கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. வீடுகளில் இருந்த மக்கள் இடிபாடுகளில் சிக்கியதை அடுத்து அக்கம்பக்கத்தினர் மீட்புப்பணியை தொடங்கினர்.

குடியிருப்பு இடிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினருக்கு தகவலும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாரபங்கி மாவட்ட வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பின்னர், தேசிய மற்றும் மாநில மீட்பு படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்தவர்கள் ரோஷினி பானு (22), ஹகிமுத்தின் (28) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் இடுபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in