’ஆதிபுருஷ்’ ராமாயணத்தை சிறுமைப்படுத்தி விட்டது... பிரபல நடிகை தாக்கு!

நடிகை தீபிகா சிக்லியா
நடிகை தீபிகா சிக்லியா

”ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளை படமாக்க வேண்டாம். ‘ஆதிபுருஷ்’ ராமாயணத்தின் பெருமையை சிறுமைப்படுத்தி விட்டது” என்று பாலிவுட் நடிகை தீபிகா சிக்லியா தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ராமயணம், மகாபாரதம் போன்ற இதிகாசக் கதைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொலைக்காட்சித் தொடர்களாகவோ அல்லது படங்களாகவோ உருவாகிறது. தெரிந்த கதையை எத்தனை முறை பார்த்தாலும், மீண்டும் மீண்டும் ரசிகர்களும் தொடர்ச்சியாகப் பார்த்து வருகின்றனர். சமீபத்தில் கூட பிரபாஸ் நடிப்பில் ‘ஆதிபுருஷ்’ என்ற பெயரில் ராமாயணக் கதை படமாக வெளியானது.

ஆதிபுருஷ்
ஆதிபுருஷ்

இந்தப் படம் பெரிய வரவேற்பு பெறாததால், ரன்பீர் கபூர், சாய்பல்லவி நடிப்பில் மீண்டும் படமாகி வருகிறது. இந்த நிலையில் ராமாயணம், மகாபாரத்தை படமாக்க வேண்டாம் என நடிகை தீபிகா சிக்லியா கூறியுள்ளார். ராமானந்த் சாகர் இயக்கத்தில் தொலைக்காட்சியில் ராமாயணக் கதை தொடராக வெளிவந்து புகழ்பெற்றது. இதில் சீதையாக நடித்துப் பிரபலமானவர் தீபிகா சிக்லியா.

இதுதொடர்பாக சமீபத்தியப் பேட்டிகளில் அவர் கூறியிருப்பதாவது, “புதுமையாகப் படமாக்க வேண்டும் என்ற நினைப்பில் ராமாயணத்தின் பெருமையை சீர்குலைக்கிறார்கள்.

நடிகை தீபிகா சிக்லியா
நடிகை தீபிகா சிக்லியா

சமீபத்தில் வெளியான ‘ஆதிபுருஷ்’ ராமாயணத்தை சிறுமைப்படுத்தி விட்டது. எனவே, ராமாயணம்- மகாபாரதம் கதைகளைப் படமாக்குவதை விட்டுவிட்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க முயற்சிக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in