காலையிலேயே அதிர்ச்சி… அதிரடியாக விலை உயர்ந்தது சிலிண்டர் விலை!

காலையிலேயே அதிர்ச்சி… அதிரடியாக விலை உயர்ந்தது சிலிண்டர் விலை!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக 203 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அவ்வப்போது நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 1,695 ரூபாய்க்கு விற்பனையான வணிக பயன்பாட்டிற்கான  சிலிண்டர் விலை தற்போது 203 ரூபாய் விலை உயர்ந்து 1,898 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிரடி விலை ஏற்றத்தால் ஹோட்டல் நடத்துவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் மாற்றமின்றி, ரூ.918.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஜூலை மாதம் முதல் தொடர்ந்து சரிந்துவந்த வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!

'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!

எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு!

நாளை தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்!

‘ஆடியோ லாஞ்ச் கேன்சல்’ அதிமுகவைத் தேடிப்போன அண்ணாமலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in