இளம்பெண்ணின் ஆடைகளைக் களைந்து முத்தமிட்ட மருத்துவர்... சாட்டையைச் சுழற்றிய உயர் நீதிமன்றம்!

கர்நாடகா உயர் நீதிமன்றம்
கர்நாடகா உயர் நீதிமன்றம்
Updated on
2 min read

நெஞ்சு வலி சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணின் ஆடைகளைக் களைந்து முத்தமிட்ட மருத்துவர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கர்நாடகா நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள மருத்துவமனைக்கு நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சைக்குச் சென்றுள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளித்த பிறகு ஈசிஜி மற்றும் மார்பு எக்ஸ்ரே ஆகியவற்றை எடுக்க மருத்துவர் பரிந்துரைத்தார். மேலும், அந்த அறிக்கைகளை வாட்ஸ் அப்பில் பகிருமாறும் கூறியுள்ளார். ஈசிஜி மற்றும் எக்ஸ்ரே ஆகியவற்றை எடுத்த இளம்பெண், அதன் அறிக்கைகளை மருத்துவருக்கு வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து மார்ச் 21-ம் தேதி மதியம் 2 மணிக்கு ஜர்கனஹள்ளியில் உள்ள தனது கிளினிக்கிற்கு வருமாறு அந்த மருத்துவர் கூறியுள்ளார். அந்த கிளினிக்கிற்கு இளம்பெண் சென்றுள்ளார். அப்போது அங்கு மருத்துவர் மட்டுமே இருந்துள்ளார். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று படுக்கச் சொன்னார்.

புத்தனேஹள்ளி காவல் நிலையம்
புத்தனேஹள்ளி காவல் நிலையம்

அவள் மார்பில் ஸ்டெதாஸ்கோப்பை வைத்து இதயத் துடிப்பைச் சரிபார்க்கத் தொடங்கினார். பின்னர் சட்டை மற்றும் உள்ளாடைகளை கழற்றச் சொன்னார். ஐந்து நிமிட பரிசோதனைக்குப் பிறகு, அந்த பெண்ணின் மார்பில் மருத்துவர் முத்தமிடதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், கிளினிக்கை விட்டு ஓடி வந்து தன் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தார். அத்துடன் புத்தனேஹள்ளி காவல் நிலையத்தில் புகாரும் அளித்தார்.

இதன் பேரில் இளம்பெண்ணின் ஆடைகளைக் கழற்றிய மருத்துவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்துச் செய்யக்கோரி கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மருத்துவர் மனுத்தாக்கல் செய்தார். அதில், ஸ்டெதாஸ்கோப்பை மட்டும் அந்த பெண்ணின் மார்பில் வைத்தேன். என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று கூறியிருந்தார்.

நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றம் உத்தரவு

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், மருத்துவர் மீதான கிரிமினல் வழக்கை ரத்து செய்ய மறுத்து விட்டது. மேலும், மருத்துவர் ஒருவர் நம்பிக்கையைத் துஷ்பிரயோகம் செய்தால், மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையிலான நம்பிக்கையின் உறவு பாதிக்கப்படும். தேவையற்ற மற்றும் வெளிப்படையான பாலியல் தூண்டுதல் இருந்ததால் மருத்துவர் மீது பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்கை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதி எம்.நாகபிரசன்னா கூறினார்.

மேலும் புகார்தாரரின் சட்டை மற்றும் உள்ளாடைகளை கழற்றுமாறு கூறிய மருத்துவர், அவரது மார்பகத்திலும் முத்தமிட்டதாக கூறப்படுகிறது. மருத்துவரின் இந்த நடத்தை ஐபிசியின் 354ஏ(1)(i) பிரிவின் கீழ் குற்றமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நோயாளியின் உடலைப் பரிசோதிக்க மருத்துவருக்கு உரிமை உண்டு. ஆனால் அதை வேறு எந்த உணர்ச்சிக்கும் பயன்படுத்த முடியாது. நோயாளிகள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும்போது அவர்களின் உதவியை நாடுகிறார்கள் என்பதை மருத்துவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அத்தகைய சூழ்நிலையை தவறாகப் பயன்படுத்தக்கூடாது.

நீதிமன்றம் தீர்ப்பு
நீதிமன்றம் தீர்ப்பு

ஒரு பெண் நோயாளியை ஆண் மருத்துவர் பரிசோதிக்கும் போது, ​​உடல் பரிசோதனையின் போது மற்றொரு பெண் இருப்பதும் அவசியம். ஆனால் மருத்துவர் அந்த வழிகாட்டுதல்களை மீறியதால் அவரின் கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டது என்று நீதிபதி கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in