ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்க வேட்டையை தொடங்கியது இந்தியா!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்க வேட்டையை தொடங்கியது இந்தியா!

சீனாவில் நடைபெற்று வரும் 19-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி பதக்க வேட்டையை தொடங்கியுள்ளது.

45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டி நேற்று சீனாவில் கோலாகலமாக தொடங்கியது. இதில், இந்திய அணி துப்பாக்கிச் சுடுதல் போட்டி மூலம் பதக்க வேட்டையை தொடங்கியுள்ளது.

10 மீட்டர் ஏர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவின் ரமிதா, மெகுலி, சவுஸ்கி ஆகிய வீராங்கனைகள் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். 1886 புள்ளிகள் பெற்று இந்திய வீராங்கனைகள் வெள்ளி பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளனர். முதலிடத்தை சீனா பெற்ற நிலையில், மங்கோலியா மூன்றாம் இடம் பிடித்தது.

அதே போல் துடுப்பு படகு போட்டியில் இந்திய ஆடவர் அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. இந்தியாவின் அர்ஜூன் லால், அரவிந்த் சிங் இணை வெள்ளி வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.

மகளிர் கிரிக்கெட் டி20 போட்டியில் இந்திய அணி வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்க தேசம் 51 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 52 என்ற எளிய இலக்கை நோக்கி இந்தியா விளையாடி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in