பரபரப்பு… மயானத்தில் பாதி எரிந்த நிலையில் மாணவரின் உடல் மீட்பு!

பரபரப்பு… மயானத்தில் பாதி எரிந்த நிலையில் மாணவரின் உடல் மீட்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அருகே பாதி எரிந்த நிலையில் மாணவரின் உடல் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காட்டரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பேடு கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் (20) என்ற இளைஞர், பல்லாவரம் அருகே தனியார் கலைக் கல்லுாரில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால், காதலுக்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து இருவரின் பெற்றோரும் காதலர்களை பிரித்தனர். இதனால் மாணவர் சஞ்சய் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சஞ்சய் துாக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், தற்கொலை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காத இளைஞரின் பெற்றோர், உடலை தகனம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

எனவே, மாணவர் சஞ்சயின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்து, உடலை புதுப்பேடு மயானத்தில் தகனம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மயானத்திற்கு சென்ற காவல்துறையினர் பாதி எரிந்த நிலையில் சஞ்சயின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in