தூத்துக்குடியில் பரபரப்பு… பழிக்கு பழியாக தலையை துண்டித்து இளைஞர் கொலை!

தூத்துக்குடியில் பரபரப்பு… பழிக்கு பழியாக தலையை துண்டித்து இளைஞர் கொலை!

தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் இளைஞர் ஒருவரின் தலை மட்டும் ரத்த வெள்ளத்தில் தனியே கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், அந்த தலையை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்டது டிஎம்பி காலனி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து விசாரணையை விரிவுபடுத்திய போது, அவரது உடல் மையவாடி என்ற இடத்தில் கிடப்பது தெரியவந்தது.

பின்னர் காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாரியப்பன் கடந்த ஏப்ரல் மாதம் அவரது உறவினரான சப்பானி முத்து என்பவரை தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.

எனவே அதற்கு பழிவாங்கும் வகையில் சப்பானி முத்துவின் உறவினர்கள் மாரியப்பனை கொடூரமான முறையில் தலையை துண்டித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

உஷார்... தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

பிரபல கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!

பரபரப்பு… அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!

அதிர்ச்சி... புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை!

அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி... வாக்குவாதத்தால் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in