அதிர்ச்சி… பள்ளியில் ‘டென்ஷன்’... வகுப்பறையில் சுருண்டு விழுந்து உயிரிழந்த ஆசிரியை!

அதிர்ச்சி… பள்ளியில் ‘டென்ஷன்’... வகுப்பறையில் சுருண்டு விழுந்து உயிரிழந்த ஆசிரியை!

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே பள்ளியில் பதற்றம் அடைந்த ஆசிரியை, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புள்ளம்பாடி அருகே ஆலம்பாக்கத்தில் உள்ள புனித தோமையார் துவக்கப்பள்ளியில் அன்னாள் ஜெயமேரி (53) என்பவர் ஆசிரியையாக பணியாற்றிய வந்தார். தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.

இவர் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு, 'எமிஸ்' எனும் கல்வித்துறை செயலி வாயிலாக, காலாண்டு தேர்வை நடத்தி, அதில் விவரங்களைப் பதிவு செய்தார். ஆனால்
தேர்வு முடிந்தபின், ஆசிரியை பதிவு செய்த விபரங்கள் செயலியில் இல்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயமேரி, இதுகுறித்து மற்றொரு ஆசிரியையிடம், பதற்றத்துடன் கேட்டுள்ளார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து மற்ற ஆசிரியர்கள் அவரை உடனடியாக புள்ளம்பாடி அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆசிரியை ஜெயமேரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பதற்றம் அடைந்து பெண் ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பள்ளிக்கல்விதுறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in