தெறிக்கவிட்ட காங்கிரஸ் கவுன்சிலர்... பேரூராட்சி தலைவி அதிர்ச்சி!

தெறிக்கவிட்ட காங்கிரஸ் கவுன்சிலர்... பேரூராட்சி தலைவி அதிர்ச்சி!

பேரூராட்சி தலைவிடம் இருந்து தீர்மான புத்தகத்தை காங்கிரஸ் கவுன்சிலர் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரோடு மாவட்டம், காசிபாளையம் ஊராட்சியில் கவுன்சிலர்கள் சிலரை தவிர்த்து தீர்மானம் நிறைவேற்றியதாக கூறி, தீர்மான புத்தகத்தை காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் பறித்து செல்லும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதங்களில் வெளியாகி இருக்கிறது. கடந்த 31ம் தேதி பேரூராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் 7 கவுன்சிலர்கள் இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறி காங்கிரஸ் கவுன்சிலர் கோதண்டன் தீர்மான புத்தகத்தை பேரூராட்சி தலைவியிடம் இருந்து பறித்துக் கொண்டு அறையை விட்டு ஓடினார்.

அப்போது அருகில் இருந்த செயல் அலுவலர் ஜனார்த்தனன் காங்கிரஸ் கவுன்சிலரை விரட்டி பிடித்தார். இந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி இருக்கிறது. இதையடுத்து காங்கிரஸ் கவுன்சிலர் கோதண்டன் 2 மாதங்கள் பேரூராட்சி கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in