நடிகர் சூர்யா கதையில் தனுஷ்... பரபர அப்டேட்!

சூர்யா- தனுஷ்
சூர்யா- தனுஷ்

நடிகர் சூர்யா கமிட் ஆன ‘புறநானூறு’ படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக கமிட் ஆகி அறிவிக்கப்பட்ட திரைப்படம் ‘புறநானூறு’. ஆனால், இந்தப் படத்தின் திரைக்கதைக்கு அதிக காலம் பிடிக்கும் என்பதால் படப்பிடிப்பு தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

சுதா கொங்கரா - சூர்யா
சுதா கொங்கரா - சூர்யா

ஆனால், சுதா கொங்கரா- சூர்யாவுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்தப் படத்தில் இருந்து சூர்யா விலகியதாகவும் அவருக்கு பதில் நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் கமிட் ஆக அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்தான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் படக்குழு தரப்பில் இருந்து வெளியாகவில்லை.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா

நடிகர் தனுஷ் கைவசம் தற்போது ‘ராயன்’, ‘குபேரா’, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ஆகிய படங்கள் உள்ளது. இது இல்லாமல், பாலிவுட் படம் ஒன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ’புறநானூறு’ படத்தை சுற்றி வரும் குழப்பங்களை விரைவில் படக்குழு தெளிவுப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in