தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி... முதுமலை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டது குட்டியானை!

குட்டியானை
குட்டியானை

குட்டி யானையை தாய் யானை நிராகரித்ததால் மாற்று யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியும் தோல்வி அடைந்தது. அதனால் குட்டியானை, இன்று அதிகாலை முதுமலை யானைகள் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டது.

கோவை மாவட்டம், மருதமலை வனப் பகுதியில் கடந்த 30 ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு வனத் துறையினர் 5 நாட்கள் சிகிச்சை அளித்தனர். இதன் இடையே தாயுடன் இருந்த மூன்று மாத குட்டி யானையை வனத் துறையினர் பராமரித்து வந்த நிலையில், அந்த குட்டி யானை தாயை பிரிந்து அதன் கூட்டத்துடன் சென்றது. இதனை வனத் துறையினர் கண்காணித்து வந்த நிலையில் உடல் நலம் தேறிய தாய் யானை மீண்டும் அதே வனப் பகுதிக்குள் விடப்பட்டது.

குட்டியானை உடன் வனத்துறையினர்
குட்டியானை உடன் வனத்துறையினர்

இந்த நிலையில் கூட்டத்துடன் சுற்றி வந்த குட்டி யானையை கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியார் தோட்டத்திற்குள் சுற்றி வந்தது. இதை தொடர்ந்து அங்கு சென்ற வனத் துறையினர் தாய் யானை இருக்கும் மருதமலை வனப் பகுதி யானை மடவு, அட்டுக்கல் வனப் பகுதிக்கு கொண்டு வந்தனர். குட்டி யானையை தாயுடன் சேர்க்க பல கட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. அதே வேலையில் மற்றொரு கூட்டத்தில் இருக்கும் பெண் யானையும் சேர்க்கவில்லை. நேற்று 2 முறை முயற்சி செய்தும் தாய் யானை குட்டியை தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் குட்டி யானை மீண்டும் ஒன்று சேர்ப்பதற்கான முயற்சிகள் தோல்வி அடைந்தது.

குட்டியானை
குட்டியானை

கடந்த 10 நாட்களாக தாயுடன் குட்டியை சேர்க்கும் பணியில் ஈடுபட்ட வனத் துறைகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது இருந்த போதிலும் உடல்நிலை பாதிக்கப்பட்ட தாய் யானை தற்போது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது உள்ளது. இதையடுத்து குட்டி யானையை முதுமலை யானை முகாமுக்கு அனுப்பி வைக்க வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் இன்று அதிகாலை 3.40 மணியளவில் குட்டியானைக்கு பால் மற்றும் உணவு வழங்கப்பட்டு கால்நடை மருத்துவர் குழுவினர் உடல் நலம் குறித்து பரிசோதனை செய்தனர். பின்னர் வாகனம் மூலம் முதுமலை யானைகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு குட்டி யானை பராமரிக்கப்பட உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in