மாநிலங்களவையிலும் நிறைவேறியது மகளிர் இடஒதுக்கீடு மசோதா!

மாநிலங்களவையிலும் நிறைவேறியது மகளிர் இடஒதுக்கீடு மசோதா!

மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 2 பேர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 454 பேர் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மசோதா குறித்து உறுப்பினர்கள் விவாதம் நடத்தினர். மக்களவையைப் போலவே, மாநிலங்களவையில் இந்த மசோதாவை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடு குறித்து விவாதங்கள் எழுந்தன.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகே மசோதா நடைமுறைக்கு வரும் என்றும், அதற்கு குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகள் என்பதால் அதுகுறித்து விவாதிக்கப்பட்டது.

ஆனால் மசோதாவை உடனடியாக செயல்படுத்த இந்தியா கூட்டணி உறுப்பினர் வலியுறுத்தினர். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, மசோதாவுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இந்த உத்வேகம் இந்தியர்களிடையே புதிய சுயமரியாதையை பிறப்பிக்கும் என்று கூறினார்.

மதோசா மீது 7 மணி நேரத்துக்கும் மேலாக விவாதம் நடைபெற்றது. இதையடுத்து இரவு 10 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. குரல் வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், 215 உறுப்பினர்களும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

யாரும் எதிர்த்து வாக்களிக்காததால், மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஒருமனதாக நிறைவேறியது. மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் பின்னர் சட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in