ஆயுத பூஜை விடுமுறை... சென்னையில் உங்க ஊர் பேருந்து எங்கு நிற்கும்?

கோயம்பேடு பேருந்து நிலையம்
கோயம்பேடு பேருந்து நிலையம்
Updated on
2 min read

ஆயுத பூஜையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக  சென்னையில் மூன்று  இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு இன்று, நாளை மற்றும் 22ம் தேதி ஆகிய நாட்களில் பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கமாக இயங்கும் பேருந்துகளை விட சிறப்பு பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படுகின்றன.  பேருந்துகள் மற்றும் பயணிகளின் நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னையில் மூன்று இடங்களில் பேருந்து நிலையங்கள் செயல்படும் என போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்டுள்ள அட்டவணைப்படி இந்த  தற்காலிக நிலையத்திலிருந்து இன்று முதல் ஞாயிறுக்கிழமை (22ம் தேதி) வரை  பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தம்:

திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வழியாக செல்லும் பேருந்துகள்  மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்  தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

பூந்தமல்லி பைபாஸ் (மாநகர போக்குவரத்துக் கழக பூந்தமல்லி பணிமனை அருகில்)

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள். பயணிகளின் வசதிக்காக பூந்தமல்லி பைபாஸ் சாலையில் இருந்து இயக்கப்படும். 

கோயம்பேடு பேருந்து நிலையம்:

மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வழி இசிஆர்), மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் குருவாயூர்  செல்லும் பேருந்துகள்  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் பரபரப்பு... பாஜக அலுவலகத்தைச் சூறையாடிய பிரபல ரவுடி!

செம மாஸ்... நடுரோட்டில் தெறிக்க விட்ட ரஜினி... வைரலாகும் வீடியோ!

பிரபல நடிகை சரணடைய உயர் நீதிமன்றம் உத்தரவு! திரையுலகில் பரபரப்பு!

நாளை விண்ணில் பாய்கிறது 'ககன்யான்' சோதனை விண்கலன்... தொடங்கியது கவுண்டவுன்!

லெஸ்பியன்னு சொல்லு... கெத்தா இருக்கும்; சர்ச்சைக் கிளப்பும் ட்ரைலர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in