இனி ராமரை வைத்து அரசியல் செய்ய முடியாது என்று தேர்தல் காட்டியுள்ளது... தமிமுன் அன்சாரி கருத்து!

தமிமுன் அன்சாரி
தமிமுன் அன்சாரி

"அயோத்தி ராமரை காட்டி இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் பிரிக்க முடியாது என்பதை மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் காட்டியுள்ளனர்" என்று, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் கட்சி பிரமுகர் இல்ல விழாவில், மனிதநேய ஜனநாயக கட்சி பிரமுகர் இல்ல விழாவில், அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியா கூட்டணி மக்களிடம் நம்பிக்கையைப் பெற்று எதிர்க்கட்சிகளின் சங்கமமாக உள்ளது. பாஜவிற்கு வாக்குகளை குறைத்தும், காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாக்களித்தும் இந்தியா கூட்டணியை ஆதரித்துள்ளனர். நாடு முழுவதும் முதல் தலைமுறை வாக்காளர்களின் விருப்பத் தேர்வு இந்தியா கூட்டணியாக இருந்திருக்கிறது.

மூன்றாம் முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி
மூன்றாம் முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி

நாங்கள் அசைக்க முடியாத சக்தி என்று கூறிய பிரதமர் மோடி, பாஜவை அசைத்துப் பார்த்து இந்திய வாக்காளர்கள் நிரூபித்துள்ளனர். உபியில் குறிப்பாக அயோத்தியில், பாஜவிற்கு தக்க பாடத்தை புகட்டியுள்ளனர். ராமரை வைத்து அரசியல் செய்யக்கூடாது. ராமரைக் காட்டி இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் பிரிக்க முடியாது என்பதை வாக்காளர்கள் காட்டியுள்ளனர். அயோத்தி ஃபைசாபாத் தொகுதியில் பெரும் தோல்வியை பாஜகவிற்கு வாக்காளர்கள் கொடுத்த தீர்ப்பை புரிந்துகொண்டு, மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுவது, வெறுப்பு அரசியலை பரப்புவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் நாட்டின் ஒருமைப்பாடு வளர்ச்சிக்கு பிரதமர் பாடுபட வேண்டும்.

பாஜக
பாஜக

பாஜக 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் சிதைந்து இருக்கிறது. பஞ்சாப்பில் சர்ச்சைக்குரிய இரண்டு வேட்பாளர்கள் சுயேட்சையாக வெற்றி பெற்றுள்ளனர். மணிப்பூரில் பாஜக 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பாஜகவின் அணுகுமுறையால் பல்வேறு மாநில மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in