தமிழ்நாட்டில் கோடைமழை... 124 ஆண்டுகளில் 7வது முறையாக அதிகம் பதிவு!

மழை
மழை

124 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 7வது முறையாக கோடைமழை இயல்பைவிட 19 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெப்ப அலை வீசியது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், மே மாதம் முழுவதும் வெப்ப அலை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை
இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை

இந்த நிலையில் திடீரென வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, ரெமல் புயல் காரமாண தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கோடை மழை பெய்தது. இதனால் அக்னி வெயில் தெரியாத அளவிற்கு வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் தொடரும் கனமழை
ஜார்கண்ட் மாநிலத்தில் தொடரும் கனமழை

குறிப்பாக தென்மாவட்டங்களில் 200மி.மீ வரை மழை பதிவானது. இதன்மூலம் தமிழ்நாட்டில் கடந்த 124 ஆண்டுகளில் 7-வது முறையாக இந்த ஆண்டு மே மாதத்தில் அதிக மழை பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாக 1943-ம் ஆண்டு மே மாதத்தில் 205.2 மி.மீ. மழை பதிவானது.

தொடர்ந்து 1930-ம் ஆண்டு 163.7 மி.மீ., 1972-ம் ஆண்டு 149.4., 1955-ம் ஆண்டு 148 மி.மீ., 1995-ம் ஆண்டு 142.5 மி.மீ., 2014-ம் ஆண்டு 139.3 மி.மீ. மற்றும் நிகழாண்டில் (2024) மே மாதத்தில் 138.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை மழை இயல்பைவிட 19 சதவீதம் அதிகம் பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in