வேலை இல்லாதவர்களுக்கு ரூ.11,000 ஊக்கத்தொகை; தமிழக அரசின் அசத்தல் திட்டம்!

வேலை இல்லாதவர்களுக்கு ரூ.11,000 ஊக்கத்தொகை; தமிழக அரசின் அசத்தல் திட்டம்!

வேலை இல்லாத இளைஞர்கள், பெண்களுக்கு கைத்தறி கற்றுக் கொடுத்து ரூ.11,000 ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் மானியக் கோரிக்கையின் போது அறிவித்தபடி இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி, இளைஞர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி அளித்து அவர்களை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து வேலைவாய்ப்பு வழங்கப்படும் அல்லது தொழில் முனைவோர்களாக உருவாக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளது.

பாரம்பரிய கைத்தறி தொழிலை அதன் பழமை மாறாமல் புத்துயிரூட்டுவது, கிராமப்புறத்திலுள்ள இளைஞர்கள் கைத்தறியை ஒரு தொழிலாக அவர்கள் பகுதியிலேயே ஆரம்பித்து, வேலையில்லா இளைஞர்களுக்கு நெசவுத் தொழில் தொடர்பாக குறுகிய கால பயிற்சி அளிப்பதே நோக்கம்.

2023-24ஆம் ஆண்டு முதற்கட்டமாக 300 இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கைத்தறி நெசவில் உள்ள தொழில்நுட்பங்கள் பயிற்சியின் வாயிலாக கற்பிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியின் வாயிலாக கைத்தறி பொருட்களின் தரத்தையும், அளவையும் மேம்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட உள்ளது.

நெசவுத்துறை பயிற்சியில் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.250 வீதம் பயிற்சி காலம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். இப்பயிற்சிக்கு சேர வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கைத்தறிகளை இயக்குவதற்கு தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும். எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் பயிற்சியில் சேர விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.loomworld.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in