போதை நெட்வொர்க்... தமிழ் நடிகைகளும் தப்பவில்லை!

போதை நெட்வொர்க்... தமிழ் நடிகைகளும் தப்பவில்லை!

மும்பை திரையுலகின் சுஷாந்த் சிங் மரணத்தின் போது பாலிவுட்டில் போதைப் பொருள் புழக்கம் சரளமாக இருப்பது வெளியுலகுக்கு தெரிய வந்தது. அதன் தொடர்ச்சியாக பாலிவுட் டான் ஷாருக்கின் மகன் போதை வழக்கில் சம்பந்தப்பட்டு கைதானது எல்லாம் வரலாறு.

இதன் தொடர்ச்சியாக பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் கே.பி. சவுத்ரி போதைப் பொருள் வழக்கில் சிக்கினார். விசாரணையில், தெலுங்கு நடிகைகளுக்கு போதைப் பொருட்களை சப்ளை செய்துவந்ததாக அவர் போலீஸாரை அதிரவைத்தார். ரஜினியின் கபாலி திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பை வெளியிட்டவர் இவர் தான். இந்த சங்கிலித் தொடர் நெட்வொர்க்கில் இப்போது தமிழ் திரையுலகில் ஜாஃபர் சாதிக்.

நடிகை நிகாரிகா
நடிகை நிகாரிகா

பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் தொடர்சியாக கோலிவுட்டிலும் போதைப் பொருட்கள் சகஜமாக புழக்கத்தில் இருப்பதாகவும், பல தமிழ் நடிகைகள் போதையில் பிடியில் சிக்கியிருப்பதாகவும் வெளியாகி வரும் தகவல்கள் அதிர்ச்சி தருகிறது.

கோடிகளில் சம்பளம், மிதமிஞ்சிய புகழ், விளம்பர வெளிச்சம், நட்சத்திர அந்தஸ்து, தொழிலதிபர்களின் அறிமுகம் என்று ஒரு கட்டத்திற்கு மேல் என்ன செய்வது என தெரியாமல் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காகவும், மேல்மட்ட அறிமுகங்களுக்காகவும் பார்ட்டிகளில் கலந்து கொள்கிறார்கள் நடிகைகள். அவர்களில் சிலர் தான் இந்த போதை பிடியிலும் வீழ்ந்துவிடுகிறார்கள் என்கிறார்கள் கோலிவுட் ஜாம்பவான்கள்.

நடிகை வரலட்சுமியின் முன்னாள் மேனேஜர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியதும், வரலட்சுமியை நேரில் விசாரணைக்கு ஆஜராக சொன்னதும் நினைவிருக்கு தானே? இதில் அவருக்கு தொடர்பில்லை என்று மறுத்தாலும், அவரது முன்னாள் மேனேஜர் நேரடி குற்றவாளி.

மிக சமீபமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் கிலோ கணக்கில் போதைப் பொருட்கள் கைப்பற்றப்படுகின்றன. கோவா, மும்பை போன்ற இடங்களில் இருந்து இந்த போதைப் பொருட்கள், சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, கேரளம் என பல்வேறு மாநிலங்களுக்கு பயணிப்பதாகச் சொல்கிறார்கள்.

நடிகர் இமான் வீட்டு கிரஹபிரவேச பார்ட்டியில் நடிகை ஸ்ரீதிவ்யா குடிபோதையில் குத்தாட்டம் போட்டதாக அண்மைகள் செய்திகள் வலம் வந்தன. இது அடுத்தக்கட்ட பாய்ச்சல். ஆம், குடி போதை எல்லாம் சகஜம் என தமிழ் சினிமா அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறது.

இந்தி, தெலுங்கு, தமிழ் திரையுலகுடன் தொடர்புடையை 3 பேர் போதை வழக்கில் இதுவரை கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த மூவருமே திமிங்கலங்கள். இவர்கள் சினிமா பரபலங்களுக்கு போதைப் பொருட்கள் சப்ளை செய்துவந்ததாக வாக்குமூலம் தந்திருக்கிறார்கள். இதைக்கேட்டுவிட்டு, இவர்களுடன் போதை தொடர்பில் இருந்த பல நடிகைகள் அதிர்ந்து கிடப்பதாகச் சொல்கிறார்கள்.

தமிழகத்தில் கிட்டத்தட்ட போதை மாஃபியா கும்பலின் தலைவராகவே செயல்பட்டு வந்திருக்கிறார் ஜாஃபர் சாதிக். மியூசிக் ஆல்பம் வெளியானாலே நடிகர்- நடிகையர் தன்னிலை மறந்து குத்தாட்டம் போடுகிறார்கள். அப்படி இருக்கையில், பட ரிலீஸ், வெளிநாடு ஷூட்டிங், கெமிஸ்ட்ரி, பயாலஜி, பிஸிக்ஸ் போன்ற பொருத்தத்திற்காக நடிகர், நடிகைகள் கலந்து கொள்ளும் பார்ட்டிகள் வேற லெவலில் போய்க்கொண்டு இருக்கின்றன.

அதே சமயம், தங்களின் பிடியைவிட்டு போய்விடக்கூடாது என்று நடிகைகளுக்கு நெருக்கமானவர்கள், அவர்களை மெல்ல போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கும் செயலும் நடப்பதாக கவலைப்படுகிறார்கள் மூத்த திரையுலக தொழிலாளிகள்.

ஜாஃபர் சாதிக் சிக்கியதும், தனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று அவர் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்திருந்தவர்களே மீடியாக்களில் விளக்கம் கொடுத்ததைப் பார்த்திருக்கலாம். ஆனால், உண்மையில் பல்வேறு முன்னணி நடிகர், நடிகைகள் ஜாஃபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்திருக்கிறார்கள் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள். அதற்கு ஆதாரமாக அவரது தொலைபேசி உரையாடல், வங்கி கணக்கு விவரங்களை அடிப்படையாக காட்டுகிறார்கள்.

சத்தமில்லாமல் கோலிவுட்டில் இது குறித்து விசாரணையும் நடந்து வரும் நிலையில், தமிழ் சினிமாவிலும் போதையின் பிடியில் சிக்கியிருக்கும் நடிகர், நடிகைகளின் லிஸ்ட் விரைவில் வெளியாகும் என்கிறார்கள். ஜாஃபர் சாதிக் வீட்டு பகுதியில் பதிவான சிசி டிவி ஃபுட்டேஜ்களையும் போலீஸார் இப்போது துருவி வருகிறார்கள். ஜாஃபர் சாதிக்கின் வீட்டிற்கு சென்றுவந்த நடிகர், நடிகைகள், வரும்போது கையை வீசிக்கொண்டு வருவதும் திரும்பிப் போகும்போது அவர் கைகளில் பெட்டி இருப்பதையும் ஃபுட்டேஜ்கள் காட்டிக்கொடுத்துள்ளனவாம்.

இந்த வழக்கின் விசாரணை சரியான பாதையில் சென்றால் கூடிய சீக்கிரமே கோடம்பாக்கமே அதிரும் வகையில் தலைப்புச் செய்திகள் தடதடக்கலாம் என்கிறார்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in