டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா - கனடா இடையிலான ஆட்டம் மழையால் ரத்து!

டி-20 கிரிக்கெட் தொடரில் மழை காரணமாக இந்தியா - கனடா ஆட்டம் ரத்து
டி-20 கிரிக்கெட் தொடரில் மழை காரணமாக இந்தியா - கனடா ஆட்டம் ரத்து

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - கனடா இடையிலான ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 33வது ஆட்டத்தில் அமெரிக்காவின் புளோரிடாவின் லாடர்ஹில் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற இருந்தது. இந்நிலையில் அங்கு மழை பெய்ததால் மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்தது.

மழை காரணமாக மூடப்பட்டிருந்த ஆடுகளம்
மழை காரணமாக மூடப்பட்டிருந்த ஆடுகளம்

இதன் காரணமாக முதலில் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் தொடர்ந்து போட்டிக்கு உகந்த சூழல் இல்லாததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

இதே மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த அமெரிக்கா - அயர்லாந்து இடையிலான ஆட்டமும் மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில், ஏ பிரிவில் லீக் சுற்றில் தோல்வியே இன்றி முதலிடத்துடன் சூப்பர் 8 சுற்றுக்குள் இந்தியா நுழைந்துள்ளது.

டி-20 கிரிக்கெட் தொடர்
டி-20 கிரிக்கெட் தொடர்

ஏ பிரிவில் உள்ள இதர அணிகளில் அமெரிக்கா மட்டும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. கடனா, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகள் வெளியேறியுள்ளன. சூப்பர் 8 சுற்றில் வரும் 20ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா, சி பிரிவிலிருந்து தகுதிபெற்ற ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in