சிஏஏ சட்டத்துக்கு தடை கோரிய வழக்கு... மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

சிஏஏ சட்டத்துக்கு தடைக்கோரிய வழக்கில் மத்திய அரசு ஏப்ரல் 8-ம் தேதிக்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட 4 வருடங்களுக்கு பிறகு கடந்த மார்ச் 11-ம் தேதி அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளின் கண்டனத்து உள்ளாகியுள்ளது. சிஏஏ, மதசார்பற்ற குடியுரிமைக் கொள்கையை மீறுவதாக இருக்கிறது என்று விமர்சித்துள்ளன. என்றாலும் இந்த சட்டம் மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. அது யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

இதற்கிடையில், ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி உட்பட நாடு முழுவதிலும் இருந்து பல மனுக்கள் சிஏஏ-வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிஏஏ சட்டத்தை அலம்படுத்தியதை நிறுத்த வேண்டும் என்று மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

சிஏஏ சட்டத்துக்கு தடைக்கோரிய வழக்கில் மத்திய அரசு ஏப்ரல் 8-ம் தேதிக்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வாடிக்கையாளர்களுக்கு இன்று தான் கடைசி நாள்... பஞ்சாப் வங்கி எச்சரிக்கை!

வாயில் தீ கொண்டு ஓவியர் வரைந்த' தல' படம்... வைரலாகும் மாஸ் வீடியோ!

சவுக்கு சங்கர் மீது சாட்டையைச் சொடுக்கிய உயர் நீதிமன்றம்... வீடியோ வருமானத்தை செலுத்த உத்தரவு!

பெங்களூருவில் மீண்டும் பரபரப்பு... பள்ளி அருகே ஏராளமான வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!

சிட்டிங் எம்பி-க்கள் 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பு... பரபரக்கும் திமுக வேட்பாளர் பட்டியல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in