மக்களவையில் அதிகரிக்கும் காங்கிரஸின் பலம்... பீகார் சுயேச்சை எம்.பியும் ஆதரவு!

மல்லிகார்ஜுன கார்கேவுடன் பப்பு யாதவ் எம்.பி
மல்லிகார்ஜுன கார்கேவுடன் பப்பு யாதவ் எம்.பி

பீகாரில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பப்பு யாதவ் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் மூலம் மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் பீகாரின் பூர்னியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பப்பு யாதவ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கேவுடன் பப்பு யாதவ் எம்.பி
மல்லிகார்ஜுன கார்கேவுடன் பப்பு யாதவ் எம்.பி

முன்னாள் எம்பி ராஜேஷ் ரஞ்சன் என்கிற பப்பு யாதவ் பீகாரில் உள்ள பூர்னியா மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பப்பு யாதவ் தேர்தலுக்கு முன்பு தனது ஜன் அதிகார் கட்சியை (ஜேஏபி) காங்கிரஸுடன் இணைத்தார்.

ஆனால், அவருக்கு பூர்னியா தொகுதியை ஒதுக்காததால் அதே தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கினார். ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் சந்தோஷ்குமாரை விட பப்புயாதவ் 23,847 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் நான்காவது முறையாக அந்த தொகுதியில் பப்பு யாதவ் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்த பப்பு யாதவ் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக மகாராஷ்டிராவில் வெற்றி பெற்ற ஒரு சுயேச்சை எம்‘.பியான விஷால் பாட்டீல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து பப்புயாதவ் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளார். இதன் மூலம் மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in