
தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மாணவர்கள் ஆசிரியருக்கு லஞ்சம் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய மாணவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதவர்கள் என்பதற்கு இதுவே சான்று. காவல் அதிகாரி அருண் போத்ரா அவரது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், சில ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடக்கின்றன. அந்த பதிவில், இந்த புகைப்படம் ஒரு ஆசிரியரிடம் இருந்து அனுப்பப்பட்டது. தேர்வில் வெற்றி பெறச் செய்ய விடைத்தாள்களில் மாணவர்கள் மறைத்து வைத்திருந்த பணம் தான் இது என குறிப்பிட்டுள்ளார்.
நமது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் முழு கல்விமுறை குறித்து கருத்துகளைத் தெரிவியுங்கள் என்று அவர் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது மிகவும் தவறான செயல் என்பதை உணர்த்தும் வகையில் காவல் அதிகாரி அருண் போத்ரா இந்த புகைப்படத்தை பொதுவெளியில் பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ளார்.
கொஞ்சமாவது பொறுப்புடன் இருந்து படித்தாலே பாஸ் மார்க் பெற்று விட முடியும். ஆனால் அதற்கு கூட முயற்சிக்காமல் மாணவர்கள் விடைத்தாளில் பணம் வைக்கிறார்கள் என்றால், பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் மனதில் இருப்பதே காரணம் என்று கூறியுள்ளார்.