மழைக்கு அழும் அரசுப் பள்ளி... குடை பிடித்தபடி பாடம் படிக்கும் மாணவர்கள்!

வகுப்பறைக்குள் குடைபிடித்தபடி அமர்ந்திருக்கும் மாணவர்கள்
வகுப்பறைக்குள் குடைபிடித்தபடி அமர்ந்திருக்கும் மாணவர்கள்

சிவகங்கை அருகே அரசு தொடக்கப்பள்ளியில் உரிய பராமரிப்பு இல்லாததால் கூரையில் இருந்து மழை நீர் ஒழுகி வருகிறது. இதனால் மழைக்காலங்களில் மாணவ - மாணவிகள் குடைகளை பிடித்துபடி அமர்ந்திருக்கும் அவல நிலை நீடித்து வருகிறது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பெரும்பாளை கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பெரும்பாளை தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை உரிய பராமரிப்பு இல்லாததால் ஓடுகள் ஆங்காங்கே உடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

அரசு தொடக்கப்பள்ளி மேற்கூரை சேதம்
அரசு தொடக்கப்பள்ளி மேற்கூரை சேதம்

இந்நிலையில் தொடர் மழை காரணமாக மாணவர்கள் பள்ளிக்குள் இருந்த போது மேற்கூரையிலிருந்து மழை நீர் ஒழுக துவங்கியது. இதனால் மாணவர்கள், குடைகளை பிடித்தபடி வகுப்பறைக்குள் அமர்ந்திருந்தனர். பள்ளியின் வகுப்பறைக்குள் பல இடங்களில் மழை நீர் கொட்டியதால், மாணவர்கள் சாப்பிடுவதற்காக வைத்திருந்த சாப்பாட்டு தட்டுகளை எடுத்து மழை நீர் ஒழுகும் இடங்களில் வைத்துள்ளனர். இவ்வாறு 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஒழுகியதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

ஒழுகும் தண்ணீரை பிடிக்க வைக்கப்பட்ட தட்டுகள்
ஒழுகும் தண்ணீரை பிடிக்க வைக்கப்பட்ட தட்டுகள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in