ஸ்டோய்னிஸ் அதிரடியால் கரை சேர்ந்த ஆஸ்திரேலியா... ஓமனுக்கு எதிராக 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

ஆஸ்திரேலியா அணி வீரர் ஸ்டோய்னிஸ்
ஆஸ்திரேலியா அணி வீரர் ஸ்டோய்னிஸ்

டி20 உலக கோப்பை தொடரில் ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

குரூப் ’பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டம் இன்று கெனிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் துவக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட், அடுத்து வந்த மிச்சல் மார்ஷ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றமளித்தனர். குறிப்பாக கிளென் மேக்ஸ்வெல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

ஆஸ்திரேலியா - ஓமன் அணிகள்
ஆஸ்திரேலியா - ஓமன் அணிகள்

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து டேவிட் வார்னருடன் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இணைந்து ரன்களை சேகரிக்க துவங்கினர். டேவிட் வார்னர் 56 ரன்களுக்கு ஆட்டம் இழந்த நிலையில், மறுபுறம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டோய்னிஸ் 67 ரன்கள் குவித்தார். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. ஓமன் தரப்பில் மெஹ்ரன் கான் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

பேட்டிங், பவுலிங்கில் அசத்திய ஸ்டோய்னிஸ்
பேட்டிங், பவுலிங்கில் அசத்திய ஸ்டோய்னிஸ்

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி களம் இறங்கியது. அந்த அணி வீரர்கள் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். ஆயன் கான் 36 ரன்களும், மெஹ்ரான் கான் 27 ரங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ஆஸ்திரேலியா தரப்பில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட ஸ்டோய்னிஸ், பந்து வீச்சிலும் அபார துல்லியத்தை வெளிப்படுத்தினார். அவர் மூன்று ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதனால் அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் ஓமன் அணியை வீழ்த்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in