மத வழிபாட்டு கூட்டநெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 27 பேர் மரணம் - உ.பியில் அதிர்ச்சி

சத்சங்கம் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு
சத்சங்கம் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசத்தில் மத வழிபாட்டு கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் போலேபாபா என்பவர் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். இன்று அவரது ஆசிரமத்தில் சத்சங்கம் எனப்படும் வழிபாட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு ஒரே நேரத்தில் குவிந்திருந்தனர். கூட்டம் முடிந்து அனைவரும் ஒரே நேரத்தில் கிளம்பிய போது கடும் நெரிசல் ஏற்பட்டது.

கூட்டம் சற்றே கலைந்தபோது 100க்கும் மேற்பட்டோர் மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை சோதித்த போது, அவர்களில் பலர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதுவரை 3 குழந்தைகள், 2 ஆண்கள் மற்றும் 22 பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

சத்சங்கம் நிகழ்ச்சி
சத்சங்கம் நிகழ்ச்சி

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விபத்து குறித்து விசாரணை நடத்த குழு ஒன்றை அமைத்துள்ளார். மேலும் மாநில அமைச்சர்கள் இருவர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in