
கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் நடத்தியதில் 9 மீனவர்கள் காயமடைந்தனர். கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி காயம்பட்ட மீனவர்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வானவன்மாதேவி கடற்கரையில் இருந்து நேற்று காலை இரண்டு விசைப் படகுகளில் அந்த ஊரைச் சேர்ந்த முருகானந்தம், முருகேசன், சுப்ரமணி உட்பட 9 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், மீனவா்களை ரப்பர் தடிகளால் தாக்கியதுடன் கடலில் தள்ளி சித்திரவதை செய்துள்ளனர்.
மேலும், விசைப்படகில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவிகள், மீனவர்கள் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலி ஆகியவற்றை பறித்துச் சென்றனர். இதையடுத்து கரை திரும்பிய மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
நாகை மீனவர்கள் இப்படி தொடர்ந்து இலங்கை கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு அவர்களின் உடைமைகளை பறித்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!
இந்தியாவைத் தோற்கடிச்சா என் கூட டின்னர் சாப்பிடலாம்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல நடிகை!
அதிர்ச்சி... இளம் மல்யுத்த வீராங்கனை தற்கொலை!
வரி ஏய்ப்பு புகார்... தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு!
சோகம்... எல்லாமே 2000 ரூபாய் நோட்டுக்கள்... 1.50 லட்சத்தை மாற்ற முடியாமல் தவிக்கும் பெண்மணி!