மகிழ்ச்சியான செய்தி! தாம்பரம் - திருச்சி இடையே விடுமுறை கால சிறப்பு ரயில் இயக்கம்!

சிறப்பு ரயில்
சிறப்பு ரயில்

இந்த வார இறுதியில் தொடர்ச்சியாக வரும் விடுமுறை தினத்தை கருத்தில் கொண்டு, சென்னையில் இருந்து திருச்சிக்கு  சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் முன்னிட்டு அதிக அளவில் மக்கள் பயணிப்பார்கள் என்ற நோக்கில் தாம்பரத்தில் இருந்து திருச்சி வரையிலும் திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்  வரும் 30ம் தேதி தாம்பரம் - திருச்சி இடையேயும், மறுமார்க்கத்தில் அக்டோபர் 1ம் தேதி திருச்சி - தாம்பரம் இடையேயும் இயக்கப்படுகிறது. 

வரும் 30ம் தேதி தாம்பரத்தில் இரவு 10.30 மணிக்கு கிளம்பும் இந்த சிறப்பு ரயில் சிதம்பரத்துக்கு அதிகாலை 1.55 மணிக்கும், மயிலாடுதுறைக்கு அதிகாலை 2.40 மணிக்கும், கும்பகோணத்துக்கு 03.15 மணிக்கும் வந்து சேரும். பாபநாசம், தஞ்சாவூர் வழியாக திருச்சியை காலை  6.10 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் அக்டோபர் 1ம் தேதி திருச்சியிலிருந்து  இரவு 10.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில்  தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்தை  காலை 6.10 மணிக்கு சென்றடைகிறது.

இதற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளதால் பயணிகள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in