குட்நியூஸ்... தொடர் விடுமுறை... ஆகஸ்ட் 15 வரை நெல்லைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

குட்நியூஸ்... தொடர் விடுமுறை... ஆகஸ்ட் 15 வரை நெல்லைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

தொடர் விடுமுறை காரணமாக வரும் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை தாம்பரம்- நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 11ம் தேதி முதல் வரும் 15ம் தேதி வரை தொடர் விடுமுறை என்பதால் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்க உள்ளது. வரும் 11ம் தேதி தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 4.15 மணிக்கு நெல்லையைச் சென்றடையும்.

இதே போல் நெல்லையில் வரும் 12ம் தேதி மாலை 5.50 மணிக்கு சிறப்பு ரயில புறப்பட்டு மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in