சபரிமலைக்கு இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

சபரிமலைக்கு இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கேரள மாநிலம் சபரிமலைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சபரிமலை சீசன் தொடங்கியுள்ளது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளில் ஐயப்ப பக்தா்கள் கலந்து கொள்ள வசதியாக தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று தொடங்கி ஜனவரி 16-ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சென்னை, திருச்சி, மதுரை, கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் மற்றும் குளிா்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

டிசம்பர் 27 முதல் டிசம்பர் 30 மாலை 5 மணியுடன் கோயில் நடை சாத்தப்படுவதால் டிசம்பர் 26 முதல் டிசம்பர் 29 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும்.

குழுவாக செல்லும் பக்தா்களுக்கு வாடகை அடிப்படையிலும் பேருந்து வசதி செய்து தரப்படும். 30 நாள்களுக்கு முன்னதாக சிறப்புப் பேருந்துகளுக்கு இணையதளம் அல்லது போக்குவரத்துக்கழக செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள கைபேசி: 9445014452, 9445014424, 9445014463, 9445014416 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in