டி20 உலக்கோப்பை கிரிக்கெட்... 77 ரன்களுக்கு சுருண்ட இலங்கை; 6 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்ற தென்னப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா அணி
தென்னாப்பிரிக்கா அணி

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் ’டி’ பிரிவு லீக் சுற்று போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் ’டி’ பிரிவு ஆட்டம் அமெரிக்காவின் நஸாவ் நகரில் நடைபெற்றது. இதில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பல பரிசை நடத்தின. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் அதிகபட்சமாக குஷால் மெண்டிஸ் 19 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கங்களிலும், ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினர்.

தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகள்
தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகள்

இதனால் 19.1 ஓவர் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்கள் மட்டும் எடுத்தது. தென்னாபிரிக்கா சார்பில் அபாரமாக பந்துவீசிய அன்ரிச் நார்ட்ஜே 4 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.

இலங்கை - தென்னாப்பிரிக்கா அணிகள்
இலங்கை - தென்னாப்பிரிக்கா அணிகள்

நட்சத்திர வீரர்கள் குவிண்டம் டீ காக் 20 ரன்களுடனும். ரீசா ஹென்ட்ரிக்ஸ் 4 ரன்களுடனும், எய்டன் மார்க்ரம் 12 ரன்களுடன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 13 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினர். இருப்பினும் அந்த அணி 16.2 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 80 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஆட்டநாயகனாக அன்ரிச் நார்ட்ஜே தேர்வு செய்யப்பட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in