காதலரை கரம் பிடிக்கிறார் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா!

நடிகை சோனாக்‌ஷி சின்ஹா
நடிகை சோனாக்‌ஷி சின்ஹா

பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா தனது காதலரைத் திருமணம் செய்ய இருக்கிறார். இந்த செய்தி அவரது ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் ‘ஜோக்கர்’, ‘தபாங்2’ போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா. 37 வயதாகும் இவர் தமிழில் ரஜினியுடன் ‘லிங்கா’ படத்திலும் நடித்திருந்தார். இவர் நடிகர் ஜாஹீர் இக்பால் என்பவரை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தார். இவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.

இப்போது இந்த ஜோடிக்கு இந்த மாதம் 23ம் தேதி மும்பையில் திருமணம் நடக்க இருக்கிறது என்ற செய்தியை பாலிவுட் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

’வந்ததிகள் எல்லாம் உண்மைதான்’ என்ற கேப்ஷனுடன் மேகசினின் கவர் போல இவர்களது திருமண பத்திரிக்கை வடிவமைக்கப்பட்டு இருக்கிறதாம். இந்தத் திருமணத்தில் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் எனப் பலரும் திரளாகக் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in