பாஜக வெற்றி பெற வேண்டி சிறப்பு சிவகாளி பூஜை... கோவையில் சுதாகர் ரெட்டி நடத்தியதால் பரபரப்பு!

சிவகாளி பூஜை நடத்திய சுதாகர் ரெட்டி.
சிவகாளி பூஜை நடத்திய சுதாகர் ரெட்டி.

பாஜக வெற்றி பெற வேண்டி கோவை அருகே கட்சியின் மேலிட இணை பொறுப்பாளர் டாக்டர் சுதாகர் ரெட்டி ஹோமம் வளர்த்து சிவகாளி பூஜை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தல் இந்தியாவில் ஏழு கட்டங்களாக 534 தொகுதிகளுக்கு நடத்தப்பட்டது. நேற்று இறுதிக்கட்டமாக 57 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடிடபெற்றது. இந்தியா முழுவதும் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

எக்சிட் ஃபோல்
எக்சிட் ஃபோல்

இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில், பாஜக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் வெளியாகின.

இந்த நிலையில், பாஜக வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டி கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் பாஜக தமிழக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வழிபாடு செய்தார். கண்டியூர் கிராமத்தில் சுதாகர் ரெட்டி ஹோமம் வளர்த்து சிறப்பு சிவகாளி பூஜை மற்றும் கோ பூஜை நடத்தி வழிபட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில்," மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராகவும், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா உருவாக மக்களின் நல்வாழ்வை வளப்படுத்தவும், தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் இந்த பூஜையை நடத்தினேன்" என்றார். இது தொடர்பான புகைப்படங்களை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கோவை அருகே சுதாகர் ரெட்டி சிறப்பு சிவகாளி பூஜை நடத்திய சம்பவம், பாஜகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in