ஆபாச வீடியோக்களில் இருப்பது நானில்லை... சிறப்பு புலனாய்வு குழுவிடம் கதறிய பிரஜ்வல் ரேவண்ணா!

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

ஆபாச வீடியோக்களில் இருப்பது நான் இல்லை. ஆனால், அவர்கள் அனைவரும் எனக்குப் பரிட்சையமானவர்கள் என்று பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹசன் தொகுதி மக்களவை உறுப்பினரான பிரஜ்வல் ரேவண்ணா, சிறப்பு புலனாய்வு குழுவிடம் கூறியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை வழக்கை எதிர்கொண்டுள்ள ஹசன் தொகுதி மக்களவைத் தொகுதி உறுப்பினரான பிரஜ்வல் ரேவண்ணா நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ஆறு நாள் காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தி வருகிறது.

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

அப்போது அவரிடம் 161 கேள்விகளுக்கான பதில்களைப் பெற்றுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக வைரலான ஆபாச வீடியோக்களை காண்பித்து பிரஜ்வல் ரேவண்ணாவிடம் எஸ்ஐடி விசாரணை நடத்தியது. அப்போது தன் மீதான அத்தனைக் குற்றச்சாட்டுகளையும் பிரஜ்வல் மறுத்தார்.

மேலும், " நீங்கள் காட்டிய வீடியோக்களில் இருப்பது நான் இல்லை. அவர்கள் அனைவரும் எனக்குப் பரிச்சயமானவர்கள். நான் யாரையும் பலாத்காரம் செய்ததில்லை. பலாத்கார புகார்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த வீடியோக்கள் குறித்து எங்களுக்கு அதிகம் தெரியாது" என்று பிரஜ்வல் கூறியுள்ளார்.

இதன்பின் ஆபாச வீடியோக்களை்ப படம் பிடிக்க பயன்படுத்திய செல்போன் எங்கே என்று எஸ்ஐடி அதிகாரிகள், பிரஜ்வல் ரேவண்ணாவிடம் கேட்டனர். அதற்கு, " நீங்கள் சொல்லும் செல்போன் என்னிடம் இல்லை. கடந்த ஆண்டு தொலைந்து போய் விட்டது. இது தொடர்பாக ஹோலேநரசிபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்" என்று கூறியுள்ளார். அவர் கூறியது உண்மையா, பொய்யா என எஸ்ஐடி தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

பிரஜ்வலுக்கு எதிரான வழக்கில் ஆபாச வீடியோக்கள் எடுக்கப்பட்ட செல்போன் பலமான ஆதாரமாக உள்ளது. இந்த செல்போன் கண்டுபிடிக்கப்பட்டால், வீடியோக்கள் அழிக்கப்பட்டிருந்தாலும், அதை அதிலிருந்து மீட்டெடுக்கலாம் என எஸ்ஐடி கருதுகிறது. ஆனால், செல்போன் முற்றிலும் அழிக்கப்பட்டால், அசல் பதிவுகளைக் கண்டுபிடிக்க முடியாது. பிரஜவல் அனுப்பிய காணொலிகள் இரண்டாம் நிலை ஆதாரம். எனவே, செல்போனை கண்டுபிடிக்கும் வேலையில் எஸ்ஐடி இறங்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in