
தமிழகத்தின் நாகப்பட்டினம், இலங்கையின் காங்கேசன் துறைமுகம் இடையே இயக்கப்பட்டு வந்த கப்பல் சேவை நாளை மறுதினம் முதல் நிறுத்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த 14ம் தேதியன்று பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், தமிழக அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவீதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த சூழலில் முதல்நாளில் போதிய பயணிகள் வராததால், 75 சதவீத கட்டண சலுகையில் ரூ.2,375 ஜிஎஸ்டி 18 சதவீதம், ஸ்நாக்ஸ் என மொத்தமாக ரூ.2,803 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அப்படியும் அன்றைய தினம் பாதி அளவுக்கு குறைவாகவே பயணிகள் இலங்கை சென்றனர். அங்கிருந்து வந்தவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருந்தது.
மேலும் இரண்டாம் நாளில் 7 பேர் மட்டுமே பயணம் செய்ய இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நாகப்பட்டினம் - காங்கேசன் துறைமுக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் என மாற்றப்பட்டது. குறைந்த அளவில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதால் வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பயணிகள் கப்பல் சேவை நாளை மறுதினத்துடன் (அக் 20) நிறுத்தப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பயணிகள் கப்பல் சேவை ஜனவரி மாதம் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கை சென்றுள்ள சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலோனோர் அவசர அவசரமாக சொந்த ஊர் திரும்ப காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட நாகப்பட்டினம் - காங்கேசன் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை பல கட்ட ஒத்திவைப்புகளுக்கு பிறகு ஒரு வழியாக தொடங்கப்பட்டது. தினசரி சேவையாக இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வாரத்திற்கு மூன்று முறை மட்டும் என மாற்றப்பட்டது. அதன் பின்னர் தற்போது பயணிகளின் வருகை குறைவால் இரண்டு மாதங்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!
இந்தியாவைத் தோற்கடிச்சா என் கூட டின்னர் சாப்பிடலாம்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல நடிகை!
அதிர்ச்சி... இளம் மல்யுத்த வீராங்கனை தற்கொலை!
வரி ஏய்ப்பு புகார்... தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு!
சோகம்... எல்லாமே 2000 ரூபாய் நோட்டுக்கள்... 1.50 லட்சத்தை மாற்ற முடியாமல் தவிக்கும் பெண்மணி!