காதலருடன் நிச்சயதார்த்தம்... சன் டிவி நடிகைக்கு குவியும் வாழ்த்துகள்!

ஸ்ரீகோபிகா
ஸ்ரீகோபிகா

’அன்பே வா’ சீரியல் நடிகை ஸ்ரீகோபிகாவிற்கும், அவரது காதலருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதுகுறித்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள ஸ்ரீகோபிகாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘அன்பே வா’ சீரியல் சமீபத்தில் முடிவடைந்தது. இந்த சீரியலில் நடித்துப் பிரபலமானவர் ஸ்ரீகோபிகா. கேரளாவைப் பூர்விகமாகக் கொண்ட ஸ்ரீகோபிகா சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்தார். பின்பு ‘90ML' திரைப்படம் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார்.

இவருக்கும் நடிகர் வைசாக் ரவி என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. கடந்த 2016-ல் நட்பாக ஆரம்பித்த இவர்களது உறவு திருமண பந்தத்தில் முடிந்திருக்கிறது. பெற்றோர், உறவினர்கள் சம்மதத்துடன் தனது காதலரைக் கைபிடிக்கிறார்.

நடிகை ஸ்ரீகோபிகா
நடிகை ஸ்ரீகோபிகா

திருமணம் குறித்து சீக்கிரம் அறிவிப்போம் என்றும் நிச்சயதார்த்தம் முடிந்த நாள் தன் வாழ்வில் மறக்க முடியாதது என்றும் குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீகோபிகா. ரசிகர்களும் சின்னத்திரை பிரபலங்களும் இந்த ஜோடிக்கு தங்கள் வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in