சுட்டெரிக்கும் வெயில்... பூண்டி நீர்த்தேக்கத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

பூண்டி நீர்த் தேக்கத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
பூண்டி நீர்த் தேக்கத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
Updated on
2 min read

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தொடர்ந்து குறைவதாலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும், மீன்கள் செத்து மிதந்து வருவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய ஏரிகளில் திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி சத்திய மூர்த்தி நீர்த்தேக்கமும் ஒன்றாகும். இந்த ஏரியில் மீன்வளர்ப்பை ஆதாரமாகக் கொண்டு 200 க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் உள்ளனர். ஏரிப்பகுதியில் போதிய மழையில்லாத காரணத்தாலும், கடுமையான கோடை வெயில் காரணமாகவும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது.

பூண்டி நீர்த்தேக்கம்
பூண்டி நீர்த்தேக்கம்

35 அடி நீர்மட்ட உயரம் கொண்ட பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் தற்பொழுது 20.77 அடி உயரத்திற்கு நீர்மட்டம் உள்ளது. 3.231 டிஎம்சி தண்ணீர் கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்பொழுது 324 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. நீர் தேக்கத்திலிருந்து 364 கன அடி நீர் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் மேலும் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பூண்டி நீர்த் தேக்கத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
பூண்டி நீர்த் தேக்கத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

இந்நிலையில் ஏரியில் உள்ள மீன்கள் குவியல், குவியல்களாக செத்து மிதந்தும் கரை ஒதுங்கி வருகிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் உயிரிழந்த மீன்கள் அழுகி துர்நாற்றமும் வீசத் தொடங்கியுள்ளது. தண்ணீர் இருப்பு குறைவாக உள்ள நிலையில், மீனவர்கள் படகு மூலம் மீன் பிடிக்க செல்லும் போது சேரும் சகதியாக மாறி கலங்கி போகிறது. இதனால் சேறு வயிற்றுக்குள் சேர்ந்து மூச்சு தினறல் ஏற்பட்டு மீன்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தண்ணீர் குறைவால் நீர் வாழ் தாவரங்கள் வெப்பம் தாங்காமல் அழுகி நச்சுத்தன்மையாக மாறிவிடுதல் போன்ற காரணங்களாலும் மீன்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படுவதாக கூறப்படுகிறது. உயிரிழந்த மீன்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in