கனமழை... திருவாரூர், காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கனமழை... திருவாரூர், காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்.

குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாகவும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம், மயிலாடி, அஞ்சுகிராமம், கொட்டாரம், தோவாளை, திட்டுவிளை, மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. அதே போல், திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

எனவே, மாணவர்களின் நலன் கருதி இன்று திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே போல் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in