முகத்தைக் கூட நேராக காட்ட முடியல... நேரலையில் வருந்திய சமந்தா!

சமந்தா
சமந்தா

அதிகளவில் ஸ்டீராய்டு எடுத்துக் கொண்டதால், முகத்தை நேராக காட்டக் கூட முடியவில்லை என நடிகை சமந்தா வருத்தமாக நேரலையில் பேசியுள்ளார்.

சமந்தா நடிப்பில் அண்மையில் வெளியான குஷி திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் நேரலையில் உரையாடினார். அப்போது, ரசிகர் ஒருவர் தங்களின் தோல் பளபளப்பாக இருக்க காரணம் என்னவென்று கேட்டார். அதற்கு பதிலளித்த சமந்தா, தனது தோல் பளபளப்பாக இல்லை என்றும், நோயின் காரணமாக அதிகளவில் ஸ்டீராய்டுகள் எடுத்துக் கொண்டதால், முகத்தின் பளபளப்பு சென்று விட்டதாக கூறியுள்ளார்.

சமந்தா
சமந்தா

மேலும், நேரில் முகத்தை காட்டக் கூட முடியவில்லை என்றும், ஃபில்டர்களை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், சமந்தாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in