அள்ளிக் குவிக்கலாம்... 80 சதவீத தள்ளுபடியில் செல்போன்கள்! வருகிறது பிளிப்கார்ட் மெகா சேல்

அள்ளிக் குவிக்கலாம்... 80 சதவீத தள்ளுபடியில் செல்போன்கள்! வருகிறது பிளிப்கார்ட் மெகா சேல்

மக்கள் மிகவும் அதிகம் எதிர்பார்த்த பிளிப்கார்ட்  பிக் பில்லியன் டேஸ் சேல் 2023  விற்பனை அக்டோபர் 8-ம் தேதி தேதி தொடங்கி அக்டோபர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு சாதனங்களைக் குறைந்த விலையில் வாங்க முடியும்.  மொபைல், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், டேப்லெட், வாஷிங்மெஷின், இயர்போன் உள்ளிட்ட பல சாதங்கள் குறைந்த விலையில் கிடைக்கும். மேலும் பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்கள் அக்டோபர் 7-ம் தேதி முதல் இந்த சிறப்பு விற்பனையில் பொருட்களை வாங்க முடியும்.

முன்னோட்டமாக நேற்று  நத்திங் போன் 1, சாம்சங் கேலக்ஸி எப்13, போக்கோ எம்5, கூகுள் பிக்சல் 7 உள்ளிட்ட போன்களுக்கு பிளிப்கார்ட் தளத்தில் சலுகை வழங்கப்பட்டது. மேலும் அக்டோபர் 8-ம் தேதி நடைபெற உள்ள சிறப்பு விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி சாதனங்களை வாங்கும் பயனர்களுக்கு கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.

குறிப்பாக அக்டோபர் 8-ம் தேதி நடைபெற உள்ள இந்த சிறப்பு விற்பனையில் ஆப்பிள் (Apple), ஐக்யூ (iQOO), ஒன்பிளஸ் (OnePlus), சாம்சங் (Samsung), ரியல்மி (realme) மற்றும் ஷாவ்மீ (Xiaomi) போன்ற முன்னணி பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களின் மீது கணிசமான தள்ளுபடிகள் கிடைக்கும். மேலும் பல மொபைல் மாடல்களுக்கு 80% வரை தள்ளுபடி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஐபோன்கள் மீதான சலுகைகள் அக்டோபர் 1ம் தேதி வெளியிடப்படும். அதே நேரத்தில் சாம்சங் ஸ்மார்ட்போன்களின் மீதான சலுகைகள் அக்டோபர் 3 ம் தேதியும், சியோமி ஸ்மார்ட்போன்களின் மீதான சலுகைகள் அக்டோபர் 7ம் தேதியும், பிக்சல் போன்கள் மீதான சலுகைகள் அக்டோபர் 5ம் தேதியும், ஓப்போ போன்கள் மீதான சலுகைகள் அக்டோபர் 8ம் தேதியும் வெளியிடப்படும். 

செல்போன்கள்
செல்போன்கள்

எனவே இந்த பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையானது இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் பிளிப்கார்ட் தளத்தில் இன்று மிகவும் அதிக எதிர்பார்த்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போன் முதல் முறையாக விற்பனைக்கு வந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in