மோடி 3.0: மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், அஷ்வினி வைஷ்ணவ் பதவியேற்றனர்!

மத்திய அமைச்சர்கள் அஷ்விணி வைஷ்ணவ், எஸ்.ஜெய்சங்கர்
மத்திய அமைச்சர்கள் அஷ்விணி வைஷ்ணவ், எஸ்.ஜெய்சங்கர்

மத்திய அமைச்சர்கள் எஸ். ஜெய்சங்கர் (வெளியுறவுத் துறை), அஸ்வினி வைஷ்ணவ் (ரயில்வே துறை) ஆகியோர் இன்று பதவியேற்றனர்.

18வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பதவி ஏற்றார். அவருடன் 71 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவி ஏற்றுக் கொண்டது.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டம்

இந்நிலையில் புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த கேபினட் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மேலும் 18வது மக்களவையின் அமைச்சர்களுக்கு நேற்று துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அதன்படி, மூத்த அமைச்சர்களான ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத் துறையும், அமித் ஷாவுக்கு உள் துறையும், நிதின் கட்கரிக்கு சாலைப் போக்குவரத்துத் துறையும், நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறையும், எஸ்.ஜெய்சங்கருக்கு வெளியுறவுத் துறையும், அஷ்வினி வைஷ்ணவுக்கு ரயில்வே துறையும் ஒதுக்கப்பட்டது.

இதேபோல், பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் அமைச்சர்களுக்கும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்று தங்களுக்கான துறை அலுவலகங்களில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர். இதேபோல் மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் பொறுப்பேற்று வருகின்றனர்.

வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பொறுப்பேற்ற பின்னர், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன். இந்த பொறுப்பை எனக்கு ஒதுக்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in