பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை... முந்தும் தொழிலாளர் கட்சி; ஆளும் கட்சிக்கு கடும் பின்னடவு

தொழிலாளர் கட்சி தலைவர் கெயர் ஸ்டார்மர்
தொழிலாளர் கட்சி தலைவர் கெயர் ஸ்டார்மர்

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி முன்னிலை பெற்றுள்ளதோடு, ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, லிபரெல் டெமோகிராட்ஸ் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன. கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி கடுமையான தோல்வியை சந்திக்கும் எனவும், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

இந்த நிலையில் அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை முதல் வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் துவக்கம் முதலே கெயர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதுவரை 204 இடங்களில் அந்த கட்சி முன்னிலை வகிப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. அதேசமயம் கன்சர்வேட்டிவ் கட்சி 36 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு எதிர்க்கட்சியான லிபரெல் டெமோகிராட்ஸ் கட்சி 23 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது.

பிரிட்டன் வாக்குச்சாவடி
பிரிட்டன் வாக்குச்சாவடி

இதன் காரணமாக 15 ஆண்டுகளாக பதவியில் இருந்து வந்த கன்சர்வேட்டிவ் கட்சி பதவியை இழக்கிறது. ’பிரக்சிட்’ எனப்படும் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் நாடு வெளியே வந்ததைத் தொடர்ந்து இந்த தேர்தல் முதல் முறையாக நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 16 கோடி வாக்களர்கள் கொண்ட பிரிட்டன் நாட்டில், வாக்குச்சீட்டு முறை அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. முதல்முறையாக இவ்வாண்டு புகைப்படங்கள் அடங்கிய அடையாள அட்டைகளுடன் பொதுமக்கள் வாக்களித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in