சவரனுக்கு ரூ.520 உயர்வு... தங்கம் விலை மீண்டும் ரூ.54 ஆயிரத்தை எட்டியது!

தங்கம்
தங்கம்

சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 விலை உயர்ந்து ரூ.54 ஆயிரத்தை எட்டியுள்ளது.

கடந்த சில தினங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை சிறிது சிறிதாக உயர்ந்து வருகிறது. நேற்றைய விலையை விட இன்று ஒரு கிராமிற்கு ரூ.65 விலை உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ரூ.6,695 ஆக இருந்த ஒரு கிராம் தங்கம் இன்று ரூ.6760 ஆக விலை அதிகரித்துள்ளது.

தங்கம்
தங்கம்

இது ஒரு கிராமிற்கு ரூ.65 என்ற அளவிலும், சவரனுக்கு ரூ.520 என்ற அளவிலும் விலை உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் விலை ரூ.54,080 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல் வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.96 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.1.50 அதிகரித்து ரூ.97.50 ஆக உள்ளது.

தங்கம், வெள்ளி நகைகள்
தங்கம், வெள்ளி நகைகள்

இதற்கிடையே தங்கம் விலை உயர்வு குறித்து தங்க நகை வியாபாரிகள் தரப்பில் கூறுகையில்," அடுத்து வரும் 10 நாள்களுக்கு தங்க நகை கிராமிற்கு ரூ.50 முதல் ரூ.60 வரை விலை உயரும் நிலைதான் இருக்கும்" என்று தெரிவித்துள்ளனர்.

ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடு தங்கமாக உள்ள நிலையில் அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தங்கம் வாங்குவோருக்கு இது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in