கண்ணீரில் மிதந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா... வைரலாகும் வீடியோ!

ஆனந்தக் கண்ணீர் விட்ட ரோகித் சர்மா.
ஆனந்தக் கண்ணீர் விட்ட ரோகித் சர்மா.

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் 10 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா பைனலுக்கு முன்னேறிய நிலையில் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கண்ணீர் விட்டு கலங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. கயானாவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ரோகித் சர்மா
ரோகித் சர்மா

அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 39 பந்துகளில் 2 அபாரமான சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 57 ரன்களை எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 47 ரன்களை விளாசினார்.

3 விக்கெட்டுக்களை வீத்திய குல்தீப் யாதவ்
3 விக்கெட்டுக்களை வீத்திய குல்தீப் யாதவ்

ஹர்திக் பாண்டியா 23 ரன்களும் சேர்த்தனர். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி இந்திய சுழற்பந்து வீச்சில் திணறியது. ஒருபுறம் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் இங்கிலாந்து அணி 16.4 ஓவரில் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனால் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பைனலுக்கு முன்னேறியுள்ளது. வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்திய வீரர்கள் மகிழ்ச்சியுடன் டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்றனர். ஏற்கெனவே பெவிலியன் சென்றிருந்த ரோகித் சர்மா, அங்கிருந்த டிரஸ்ஸிங் ரூம் கேலரியில் உணர்ச்சிவசப்பட்டு அமர்ந்திருந்தார்.

மேலும், வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள் வந்தபோது ரோகித் சர்மா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய தென்னாப்பிரிக்காவும், இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்ற இந்தியாவும் நாளை (ஜூன் 29) இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன. பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி உலக சாம்பியனாகும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in