எகிறுது எதிர்பார்ப்பு... மோடி போட்டுப் பார்த்துட்டாரு... ஜியோ ஸ்மார்ட் கிளாஸ் அறிமுகம்! என்னென்ன வசதிகள்?!

எகிறுது எதிர்பார்ப்பு... மோடி போட்டுப் பார்த்துட்டாரு... ஜியோ ஸ்மார்ட் கிளாஸ் அறிமுகம்! என்னென்ன வசதிகள்?!

ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் கிளாஸ், ஜியோ கிளாஸை அறிமுகம் செய்துள்ளது.  கடந்த ஆண்டு நடந்த எம்டபிள்யூசி 2022 நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்த ஜியோ ஸ்மார்ட் கிளாஸை அணிந்துப் பார்த்து, 5ஜி சேவையின் தேவைகள் குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது. அப்போதிலிருந்தே இந்த ஸ்மார்ட் கிளாஸின் மீதான எதிர்பார்ப்புகள் எழ துவங்கின.

இந்த ஜியோ கிளாஸ் ஒரு மிக்ஸ்டு-ரியாலிட்டி ஹெட்செட் ஆகும். அதாவது, விர்ச்சுவல் மற்றும் நிஜ உலகம் என இரண்டையும் ஒருங்கிணைத்து மிகவும் ஆழமான அனுபவத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது. இரு உலகங்களிலும் சிறந்ததை வழங்க, ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி இரண்டின் கலவையைப் பயன்படுத்துகிறது.

இந்த ஜியோ கிளாஸ் 100-இன்ச் FHD மைக்ரோ-லெட் 3D டிஸ்ப்ளே மற்றும் வாய்ஸ் மற்றும் கேஸ் இன்டராக்ஷன் கொண்ட இலகு ரக ஸ்மார்ட் கிளாஸ் ஆகும். 174 மிமீ நீளம், 155 மிமீ அகலம் மற்றும் திறந்திருக்கும் போது 38 மிமீ உயரம் கொண்ட ஜியோ கிளாஸ் சிறியதாகவும், காம்பேக்டாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கேபிள் மற்றும் விசர் இல்லாமல் வெறும் 69 கிராம் எடையைக் கொண்டுள்ளது. 

ஸ்மார்ட் கிளாஸ்
ஸ்மார்ட் கிளாஸ்

இதை ஸ்மார்ட்ஃபோன், லேப்டாப், கேமிங் கன்சோல் அல்லது டைப்-சி டிஸ்ப்ளே அவுட்-புட் கொண்ட வேறு எந்த கேட்ஜெட்டாக இருந்தாலும்,  ஜியோகிளாஸ் ஏஆர் ஸ்மார்ட் கிளாஸுடன் தடையின்றி இணைக்கலாம் மற்றும் உள்ளடக்கத்தை 100-இன்ச் விர்ச்சுவல் ஸ்கிரீனில் ஸ்கிரீன்காஸ்ட் செய்து கொள்ளலாம் என்பது கூடுதல் வசதி.

இம்மர்சிவ் மோட், ஏ.ஆர் காஸ்ட், விர்ச்சுவல் டெஸ்க்டாப் மானிட்டர் மற்றும் விர்ச்சுவல் பிசி போன்ற அம்சங்களுடன் ஜியோ கிளாஸ் வருகிறது. கூடுதலாக -1.5 முதல் -5 வரையிலான லென்ஸ் உடன் இணக்கமான காந்த லென்ஸ் பிரேம்களுடன் வருகிறது. இத்தனை வசதிகள் இருப்பதால், இப்போதிலிருந்தே ஜியோ கிளாஸுக்கு எதிர்பார்ப்புகள் எகிற துவங்கியுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

அதிகாலையிலேயே அதிர்ச்சி... சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு! கதறும் பொதுமக்கள்!

பகீர்...நடுரோட்டில் போலீஸ்காரர் மீது கொலைவெறி தாக்குதல்.... அதிர்ச்சி வீடியோ

டிகிரி முடித்தவர்களுக்கு விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

குட்நியூஸ்... இன்று முதல் மின் கட்டணம் அதிரடியாக குறைப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in