கடன் வழங்க பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்துக்கு தடை! ரிசர்வ் வங்கி அதிரடி!

கடன் வழங்க பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்துக்கு தடை! ரிசர்வ் வங்கி அதிரடி!

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் இரண்டு திட்டங்களின் கீழ் கடன் வழங்க ரிசர்வ் வங்கி அதிரடியாக தடை விதித்துள்ளது. 

வங்கி சாரா நிதி நிறுவனமான 'பஜாஜ் பின்சர்வ்' பைனான்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் கடன் வழங்கி வருகிறது.  இஎம்ஐ வசதியில் பொருட்கள் வாங்க பலரும் பஜாஜ் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 'இ-காம்', 'இன்ஸ்டா இஎம்ஐ கார்டு' ஆகிய இரண்டு திட்டங்களின் கீழ் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் கடன் வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது. 

இந்திய ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கடன் வழிகாட்டுதல்களின் தற்போதைய விதிகளை பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் முறையாக கடைப்பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே அதன் காரணமாக தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. 

கடன் குறித்த உண்மையான விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு  வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்பதும், பிற டிஜிட்டல் கடன் விவர அறிக்கைகளில் உள்ள குறைபாடுகளும்தான் தடைக்கான காரணம்.

எனவே, குறைபாடுகள் சரிசெய்யப்படும் வரை இந்த தடை தொடரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in