அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகுது மழை: 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

மழை
மழை

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.

மழை
மழை

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசியது. இந்த சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் வெப்பம் தணிந்து இதமான குளிர்காற்று வீசி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று மூன்று மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்

அது வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களின் ஓரிரு இடத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in