அதிகாரிகள் அதிர்ச்சி... வீட்டு அறையில் கட்டுக்கட்டாக பணம்! பதறவைத்த காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர்

அதிகாரிகள் அதிர்ச்சி... வீட்டு அறையில் கட்டுக்கட்டாக பணம்! பதறவைத்த காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர்

பெங்களூரு நகர முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் அஸ்வத்தம்மா வீட்டில் இருந்து 23 அட்டைப்பெட்டிகளில் கட்டுக்கட்டாக 500 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் நேற்று நள்ளிரவு பெங்களூருவில் காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் அஸ்வத்தம்மா வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இவர் பெங்களூரு மாநகராட்சியின் 95-வது வார்டு கவுன்சிலராக இருந்தவர்.

இவரது கணவர் அம்பிகாபதி ஒப்பந்ததாரர் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர்களுக்கு சொந்தமான ஆர்.டி.நகர் பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், பூட்டி வைத்திருந்த அறையின் உள்ளே மெத்தைக்கு அடியில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருந்தது சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. 23 அட்டை பெட்டிகளில் இருந்து 42 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in