ஜூன் 4-ம் தேதி சூரியன் புதிய விடியலைக் கொண்டு வரப் போகிறது... ராகுல் காந்தி நம்பிக்கை!

மு.க.ஸ்டாலினுடன், ராகுல் காந்தி.
மு.க.ஸ்டாலினுடன், ராகுல் காந்தி.

ஜூன் 4-ம் தேதி சூரியன் புதிய விடியலைக் கொண்டு வரப் போகிறது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏழாம் கட்டமாக 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 13, மேற்குவங்கத்தில் 9, பீகாரில் 8, ஒடிசாவில் 6, இமாச்சலப்பிரதேசத்தில் 4, ஜார்க்கண்டில் 3 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இறுதி கட்டமாக நடக்கும் 57 தொகுதிகளில் மொத்தம் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதில் உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். இந்த 57 தொகுதிகளில் இருந்து 10.02 கோடி பேர் இன்று வாக்களிக்க உள்ளனர். இதனையடுத்து ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்," இதுவரை நடந்த வாக்குப்பதிவின்படி, இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க போகிறது என்பது தெளிவாக தெரிகிறது. கொளுத்தும் வெயிலிலும், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற மக்கள் வாக்களித்தனர். இதற்காக நான் பெருமைப்படுகிறேன்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இன்று பெருந்திரளாக வந்து ஆணவம் மற்றும் கொடுங்கோன்மையின் அடையாளமாக மாறியுள்ள இந்த அரசுக்கு இறுதி அடி கொடுக்க உங்கள் வாக்குகளைச் செலுத்துங்கள். ஜூன் 4-ம் தேதி சூரியன் புதிய விடியலைக் கொண்டு வரப் போகிறது" என்ற அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in