கோலிவுட்டிற்கு அறிமுகமானார் லாரன்ஸின் தம்பி... புல்லட் படத்தின் முதல் தோற்றம் வெளியீடு!

புல்லட் படக்குழு
புல்லட் படக்குழுDurka muthuvelan

இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் அட்டகாசமான ஹாரர் திரில்லர் கதைகளத்தில் வெளியான திரைப்படம் டைரி. முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இன்னாசி இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அவர் நாயகனாக அறிமுகமாகிறார்.

எஸ். கதிரேசனின் பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் 12வது தயாரிப்பாக உருவாகும் இப்படத்திற்கு ‘புல்லட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் படப்பிடிப்புடன் தொடங்கியது.

படத்தில் எல்வின் நாயகனாக நடிக்கும் நிலையில், ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். பிரபல தெலுங்கு நடிகை வைஷாலி ராஜ் எல்வினுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

புல்லட் திரைப்படம்
புல்லட் திரைப்படம்

இந்நிலையில், புல்லட் திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது. படக்குழு வெளியிட்ட போஸ்டரை, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in